தமிழகத்தில் கடந்த ஆறு வருடங்களாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 25 புதிய சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட இருக்கின்ற 50 சுகாதார நிலையங்களுக்கு 120 கோடி செலவாகும் என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சுகாதார நிலையங்களை அமைக்க மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40% நிதி ஒதுக்கும் எனவும் கூறியுள்ளார்.
Categories
“6 வருடங்களாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை”… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு…!!!!
