அக்டோபர் மாத இறுதியில் குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக குரூப் 2, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றது. அதன்படி குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தேர்வு நடைபெற்றுள்ளது இந்த தேர்வை 9 லட்சத்து 890 பேர் எழுதி இருந்தனர். இதில் 5,417 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதே போல் குரூப் 4 தொகுதியில் 7,301 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றுள்ளது இந்த தேர்வை 18 லட்சத்து 50,477 பேர் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் வெளியீட்டுள்ளது அதன்படி மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என கூறியுள்ளது. அதன்படி மகளிருக்கு முதலில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவுப்படி இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டி இருப்பதினால் அது பற்றிய பணிகளை அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதனால் குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.