சுடுதண்ணீர் தர மறுத்த மனைவியை கோடாரியால் 80 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சங்கரன்கோவில் அருகே 80 வயதை தொட்ட பொன்னுசாமி என்பவர் உடல்நலம் குன்றிய காரணத்தினால் தனக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு மனைவி சீதாலட்சுமியி டம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் கொண்ட பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவில் சீதாலட்சுமி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.மனைவி மரணம் அடைந்ததை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார் பொன்னுசாமி இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமறைவான பொன்னுசாமியை நேற்று கைது செய்துள்ளனர்.