Categories
உலக செய்திகள்

உள்நாட்டு போர்… “இது எச்சரிக்கை தாக்குதல்”ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பேச்சு… பெரும் பரபரப்பு…!!!!

ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் கீ என்னும் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். அந்தக் கப்பல் மார்சல் தீவு கொடியேந்தி வந்த எண்ணெய் கப்பல் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால் இந்த ட்ரோன் தாக்குதலில் இருந்து தங்கள் கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அந்த கப்பல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இது பற்றி அந்த நிறுவனம் பேசும்போது ட்ரோன் தாக்குதலால் கப்பல் பாதிக்கப்படவில்லை எந்த மாசுபாடும் இல்லை அனைத்து சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலை இங்கிலாந்து கடற்படை உறுதிப்படுத்தி இருக்கிறது அமெரிக்க கடற்படையின் மத்திய கிழக்கு ஐந்தாவது பிரிவும் உறுதி செய்துள்ளது.

ஆனால் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது மேலும் இந்த தாக்குதல் எச்சரிக்கை தாக்குதல் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அரசு படைகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை தடுப்பதற்காகத்தான் கிரீஸ் எண்ணெய் கப்பலை குறி வைத்திருப்பதாக கூறியுள்ளனர். இது பற்றி ஏமன் அரசு தரப்பில் பேசும் போது இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது இது அமைதி பேச்சுவார்த்தையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் தனது ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய மூன்றாவது ட்ரோன் தாக்குதலில் இதுவும் என அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

Categories

Tech |