Categories
உலக செய்திகள்

டோராண்டோ தீவு விமான நிலையத்தில் வெடிகுண்டு…? இரண்டு பேர் கைது… பெரும் பரபரப்பு..!!!!

டொரேண்டா தீவு விமான நிலையத்தின் படகு முனையதிற்கு அருகே வெடிக்க கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயில் லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வெடிக்கும் சாத்தியமுள்ள பொருளை கையாண்டு வருவதாக டொரண்டோ போலீசார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து படகுமுறையதிற்கு அருகில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தில் குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். வெடிக்க கூடிய பொருள் இருப்பதாக போலீசார் கூறியதையடுத்து விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு இருப்பதாகவும் இரண்டு ஏர் கனடா விமானங்கள் கொண்டாடியும் மற்றும் ஹாமில்டன்ணுக்கு திருப்பிவிடப்பட்டிருப்பதாகவும் விமான நிலையம் கூறியுள்ளது. மேலும் பல மணி நேரமாக டெர்மினலுக்குள் சிக்கித் தவித்த பயணிகள் தண்ணீர் டாக்ஸிகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |