Categories
மாநில செய்திகள்

மக்களே பொறுத்திருந்து பாருங்க!… 2026-ல் வாரிசு ஆட்சிதான்…. புதிய சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்…..!!!!

தமிழகத்தில் சென்ற 2021 ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றியடைந்தது. இதில் தி.மு.க மட்டும் 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசிற்கு பல வகையில் பாராட்டும், கடுமையான விமர்மசனும் என கலவையான மக்கள் கருத்து எழுந்து வருகிறது வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் சில பேர் 2026ல் விஜய் தலைமையினா ஆட்சி அமைய இருப்பதாக பரபர அரசியல் போஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கின்றனர். அவற்றில், 2021ல் விடியல் ஆட்சியை பார்த்துவிட்டோம் மனமாக.. வரும் 2026ல் வாரிசு ஆட்சியை பார்க்கப் போகிறோம் தரமாக..! என எதுகை மோனையில் போஸ்டர் விளம்பரம் செய்து உள்ளனர். இதன் வாயிலாக விஜய் அரசியலில் கோலோச்சுவார் என்பதையும் வாரிசு திரைப்படத்தின் விளம்பரத்தையும் செய்து இருக்கின்றனர். விஜய் ரசிகர்கள் ஒட்டிய இந்த எதுகைமோனை போஸ்டரானது கவனம் பெற்றுள்ளது.

Categories

Tech |