Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் vs பாபர் அசாம்….. 100க்கு அதிக மார்க் யாருக்கு?….. ஐசிசி வெளியிட்ட வீடியோ.!!

சூர்யகுமார் யாதவ் மற்றும் பாபர் அசாம் ஆகியோரது விளையாட்டின் திறமைகளை  100க்கு மதிப்பிட்டு, ஐசிசி வீடியோக்களைப் பகிர்ந்துள்ளது.

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு எதிர்கொள்கிறது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் இன்று மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் அனைத்து அணிக்கும் சவாலாக இருப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் இந்திய அணிக்காக அவர் கடந்த டி20 தொடர்களில் அனைத்துமே சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார். மைதானத்தில் அனைத்து திசையிலும் அடித்து விளாசும் இவர் இந்திய 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படுகிறார்.. மேலும் ஐசிசி டி20 தர வரிசையில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அதேசமயம் பாகிஸ்தான் அணியில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் துருப்புச் சீட்டாக இருக்கிறார். தொடக்க வீரராக களமிறங்கும் அவரும் ரிஸ்வானும் சேர்ந்து பல போட்டிகளில் பாகிஸ்தானுக்கு வெற்றியை பரிசளித்துள்ளனர்.. ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் சூரியகுமாருக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் டீம் இந்தியா பேட்டர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோரின் திறமைகளை 100க்கு மதிப்பிடும் வீடியோக்களை ஐசிசி பகிர்ந்துள்ளது. அதில், சூர்யகுமார் தனது பவர் 90, ஸ்ட்ரோக் ரேஞ்ச் 93, ஸ்பின்-ஆடும் திறன் 95, வேகத்தில் விளையாடும் திறன் 93 மற்றும் பீல்டிங் 90 என மதிப்பிடப்பட்டுள்ளார். மேலும்  பாபர் தனது பவர் 70, ஸ்ட்ரோக் வீச்சு 80, சுழல்-விளையாடும் திறன் 75, வேக-ஆடும் திறன் 90 மற்றும் அவரது பீல்டிங் 60 என மதிப்பிட்டப்பட்டுள்ளார். எனவே இந்திய அணியின் துருப்புசீட்டு சூர்யகுமார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

Categories

Tech |