கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கைரேகை நிபுணர்களும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மோப்பனாயும் வரவழைக்கப்பட்ட விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கோவை நகரில் பாதுகாப்புக்காக சேலம்,ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.