காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் மீது போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியிடப் படகுழு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காந்தாரா படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் பேசும் போது இடம் பெற்ற பூட்டா கோலா இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார். ஆனால் கன்னட நடிகர் சேத்தன்குமார் என்ற சேத்தன் அகிம்சா பேசும் போது, பூட்டா கோலா இந்து கலாச்சாரம் கிடையாது என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இதனை கண்டித்து பஜ்ரங்கதள அமைப்பினர் குரல் கொடுத்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த அமைப்பு சிவகுமார் என்பவர் சேர்த்ததற்கு எதிரியாக சேஷாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து மக்களை தவறாக வழிநடத்துதல் என்று பிரிவின் கீழ் போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்து இருக்கின்றனர். மேலும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி நோட்டீஸ் அனுப்பப்படும் அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன் ஐகோர்ட் நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் புண்படுத்தும் விதமாகவும் ட்விட்டரில் சேத்தன் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகின்றது.