ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்து செய்திகளை கூறியுள்ளார்.
மேலும் நம்முடைய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடனும் எல்லையில் பாதுகாப்பு பணியில் கண்காணிப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருக்கின்றனர்.