Categories
தேசிய செய்திகள்

எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு… 6 மாதம் சஸ்பெண்ட்… காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை…!!!!!

கேரளாவில் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் எல்.தவுஸ். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கோர்ட் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது இருப்பினும் விசாரணைக்காக நேற்று அவர் விசாரணை குழுமுன் ஆஜராகி உள்ளார். இந்த சூழலில் கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே சுதாகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது எம் எல் ஏ எல்தவுஸ் அளித்த விளக்கங்களை கட்சி தலைமை ஆய்வு செய்துள்ளது.

ஆனால் அதில் திருப்தி ஏற்படவில்லை அவர் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக பணியாற்ற வேண்டியது அவசியம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு கோர்ட் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு காங்கிரஸ் கமிட்டியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தினசரி விவகாரங்களில் இருந்து ஆறு மாத காலத்திற்கு கட்சி அவரை சஸ்பெண்ட் செய்கின்றது. மேலும் இந்த காலகட்டத்தில் அவரது செயல்பாடுகளை கட்சி கவனிக்கும் அதன் பின்னரே அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |