Categories
சினிமா

கர்நாடகா சென்ற நடிகர் சூர்யா…. எதற்காக தெரியுமா?…. குஷியில் துள்ளி குதித்த ரசிகர்கள்….!!!!

நடிகர் சூர்யா திரைப்படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு இருப்பதால் அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். சூர்யாவுக்கு அந்த மாநிலங்களில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சூர்யா திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்கு உள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்று அம்மாநில ரசிகர்களை சூர்யா சந்தித்தார். பெங்களூருவிலுள்ள ஒரு ஓட்டலில் இச்சந்திப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதில் பங்கேற்றனர். இதன் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா இப்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார். அத்துடன் அவர் சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் மீண்டுமாக நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |