கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று முன்தினம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த அரசு தையலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது பயங்கரமாக மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் பெண் உள்பட இரண்டு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதே விபத்துக்கு முக்கிய காரணம் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.