Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பெட்டி…. மின்மாற்றில் திடீர் தீ விபத்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!

மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது.

இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றில் இருந்த பழுதை நீக்கி சீரமைத்தனர். அதன்பிறகு அப்பகுதியில் மின்விநியோகம் நடைபெற்றது.

Categories

Tech |