Categories
மாநில செய்திகள்

பகீர்! துப்பாக்கி சூடு….‌18 மணி நேரமாக செய்த கொடூரம்…. இந்திய கடற்படை மீது மீனவர்கள் பரபரப்பு புகார்…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் வீரவேல் உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த INS பங்காரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்து.

இதை பார்த்த மீனவர்கள் இலங்கை கடற்படை என்று தவறுகளாக நினைத்து விசைப்படகை திருப்பியுள்ளனர். இதை பார்த்த கடற்படையைச் சேர்ந்தவர்கள் மீனவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால் கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரவேல் என்பவருக்கு உடம்பில் 2 இடங்களில் குண்டு பாய்ந்தது. இவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த மற்ற மீனவர்களை  நள்ளிரவு நேரத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் சிறைப்பிடித்த மீனவர்களை கடற்படை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கை கால்களை கட்டி இரும்பு லாடால் அடித்ததாகவும், 18 மணி நேரமாக உணவு மற்றும் தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |