பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை 28 படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமா திரையரங்க அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மத லீலை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் நாகசைதான்யா நடிப்பில் என் சி 22 படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Diwali special from the director of #NC22 @vp_offl 😀😀 a hidden talent not many kno!!! @Premgiamaren @thisisysr pic.twitter.com/SafLOIn0xd
— Nitinsathyaa (@Nitinsathyaa) October 22, 2022
இந்த சூழலில் இவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா என் சி 22 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தீபாவளி ஸ்பெஷல் மறைந்திருக்கும் திறமை என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.