Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பிடும் “இனிப்பு சேவு”

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு                         –  2 கப்
  • சர்க்கரை                                  –  6 கப்
  • பச்சரிசி மாவு                         –  2 கப்
  • தண்ணீர்                                   –  2 கப்
  • எண்ணெய்                              –  தேவையான அளவு

 

செய்முறை

முதலில் பச்சரிசி மாவு மற்றும் கடலை மாவை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

கடாய் ஒன்றில்  பொரிக்க தகுந்த அளவு எண்ணெயை காயவைத்து முறுக்குக் குழாயில் பிசைந்து வைத்துள்ள மாவை போட்டு நன்றாக பிழிந்து வெந்தவுடன் எடுத்து விடவும்.

மறுபுறம் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி தயாராக வைத்துக் கொள்ளவும்.

எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுத்துள்ள முறுக்கை காய்ச்சிய சீனி பாகில் போட்டு ஊறவைத்து எடுத்து விடவும்.

குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு சேவு  தயார்.

Categories

Tech |