ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனங்களில் உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.