Categories
உலக செய்திகள்

அதிபர் எதிர்ப்பு போராட்டம்… துப்பாக்கி சூடு சம்பவத்தில் 62 பேர் பலி… பெரும் பதற்றம்…!!!!!

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டின் அதிபராக இட்ரிஸ் டெபி இட்னோ என்பவர் 30 வருடங்களாக பதவி வகித்து வருகின்றார். போராளிகளுக்கு எதிராக அவர் படையை வழிநடத்திய போது கடந்த வருடம் ஏப்ரல் இருபதாம் தேதி கொல்லப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது மகனும் ராணுவ தளபதியுமான மஹமத் இட்ரிஸ் டெபி(38) இடைக்கால அதிபர் ஆகியுள்ளார். அவரது 18 மாத பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைய இருந்தது ஆனால் சமீபத்தில் அவரது பதவி காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அங்கு ஜனநாயகம் வளர்வதற்கான வாய்ப்புகள் தடையாக அமைந்துள்ளது இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது அதிபருக்கு தலைவலியாக மாறி உள்ளது ராணுவத்தை கொண்டு போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அங்கு இதுவரை இல்லாத விதமாக போராட்ட மாபெரும் கிளர்ச்சியாக உருவெடுத்து தலைநகர் நிஜாமீனா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மவுண்டோ என பல நகரங்களில் போராட்டக் காரர்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கியை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 62 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். டோபா, சார் போன்ற இடங்களிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது தந்தை கொல்லப்பட்ட பிறகு மகமத் இட்டீஸ் அதிபர் பொறுப்பேற்றதிலிருந்து நடந்த மிகக் கொடிய அதிபர் எதிர்ப்பு போராட்டங்கள் இவை என கூறப்படுகின்றது.

பிரான்ஸ் ஆப்பிரிக்கா யூனியன் உள்ளிட்ட பல நாடுகளும் அமைப்புகளும் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டித்து இருக்கிறது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிராந்திய இயக்குனர் சமீரா தாவூத் போராட்டக்காரர்களுக்கு எதிராக இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சாத் நாட்டின் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். மேலும் தலைநகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேசும்போது அதிகாலை 3 மணிக்கு போராட்டக்காரர்கள் விசில் அடிக்க தொடங்கினர் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

ஆனால் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது அப்போது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியுள்ளது. இதில் குண்டு பாய்ந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து  விழத் தொடங்கியுள்ளனர் எங்கும் பதற்றமான சூழல் நிலவுகிறது எனக் கூறியுள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் சாத் நாட்டின் பத்திரிக்கையாளர் நர்சிஸ் ஓரேட்ஜேயும் அடங்குவர் தற்போது அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |