Categories
தேசிய செய்திகள்

மாருதி சுஸுகி ஆலை வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்…. அச்சத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அட்வைஸ்….!!!!

ஐஎம்டி மானேசரிலுள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவா் நேற்று தெரிவித்தாா். இதனையடுத்து வனத்துறை குழுவினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். எனினும் சிறுத்தையை வளாகத்திற்குள் மற்றும் வெளியே கண்டுபிடிக்க முடியவில்லை என மூத்த வன அதிகாரி தெரிவித்தாா். கடந்த புதன்கிழமை காலை 7:20 மணியளவில் வளாகத்திற்குள் சிறுத்தை உள்ளதை பாா்த்து ஒரு தொழிலாளி எச்சரிக்கை எழுப்பியதை சிசிடிவி கேமராக்கள் வாயிலாக காவல்துறையினர் கண்டறிந்தனா்.

அதன்பின் மாருதி நிா்வாகம் தொழிலாளா்களுக்கும், மற்றவா்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியது. இதற்கிடையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அந்த சிசிடிவி காட்சிகளில் கசன் கிராமத்திலிருந்து ஆலைக்குள் சிறுத்தை வருவது தெரிந்தது. இருப்பினும் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு அங்கு சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஐஎம்டி மானேசா் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டா் சுபாஷ் சந்த் கூறினாா். அப்பகுதி வனக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறது. தற்போது நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று முதன்மை தலைமைப் பாதுகாவலா் எம்.எஸ். மாலிக் கூறினாா்.

Categories

Tech |