இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார்அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஏனெனில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஆதார்கார்டை அடிக்கடி இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவுத் தளத்திலிருந்து சரிபார்க்கப்பட வேண்டும். அப்போது தரவுத் தளத்திலுள்ள தகவல்களுடன் உங்களது ஆதார்கார்டு விபரங்கள் பொருந்துகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
ஆதார்கார்டு வாயிலாக பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது. இது போன்ற மோசடி குற்றங்களை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டும். பயனாளர்கள் அவர்களது ஆதார்அட்டையை சரிபார்க்கும் போது ஆதார் கார்டு செயலில் இருக்கிறதா (அ) செயல் அற்றதாக இருக்கிறதா என்பது தொடர்பாக அவருக்குத் தெரியும்.
வீட்டில் இருந்தபடியே ஆதார்கார்டை சரிபார்ப்பது எப்படி…?
# முதலாவதாக யுஐடிஏஐ-ன் அதிகாரபூர்வமான தளமான www.uidai.gov.in-க்குச் செல்ல வேண்டும்.
# இணையத்தில் “ஆதார் சேவைகள்” என்பதன் கீழ் இருக்கும் Verify Aadhaar (AADHAAR) என்பதை கிளிக் செய்யவேண்டும்.
# தற்போது திரையில் தெரியக்கூடிய புது பக்கத்தில் 12 இலக்க ஆதார்எண்ணையும், கேப்ட்சாவையும் உள்ளிடவேண்டும்.
# ஆதார் எண் உண்மையானதாக இருப்பின் “ஆதார் சரிபார்ப்பு முடிந்தது” என்ற செய்தியை இணையதளம் காண்பிக்கும்.
# அத்துடன் அதில் உங்களது வயது, மாநிலபெயர் மற்றும் மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்கள் ஆகிய மற்ற தகவல்கள் காண்பிக்கப்படும்.
# பலமுறை முயற்சிசெய்தும் ஆதார்எண்ணைச் சரிபார்க்கத் தவறினால், உங்களது ஆதார்எண் இல்லை என இணையதள பக்கத்தில் காட்டப்படும்.