Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ…! இப்படி ஆளுங்ககிட்ட சிக்கிட்டோமே… அசர வைத்த பாஜக அமைச்சர் பதில்..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் தான் முதல்ல பேசணும் என சொன்னேன். அப்புறம் சொன்னாரு…  இல்ல நீங்க பேசிட்டு போயிட்டீங்க அப்படின்னா   கூட்டம் கலைந்திட போகுதுன்னு சொன்னாரு. இல்ல, இல்ல, நான் கடைசி வரைக்கும் இருப்பேன். முக்கிய பேச்சாளர்கள் எல்லாரையும் அழைத்து இருக்கீங்க.

மிகச்சிறந்த பேச்சாளர்கள் ,  கலைஞரோடு பயணித்தவர்கள், நம்முடைய தலைவரோடு பயணித்தவர்கள்,  எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிற மூன்று முக்கிய பேச்சாளர்கள் வந்திருக்காங்க. சிதம்பரம் அண்ணன் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் எல்லாம் வந்திருக்காங்க. அவங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இப்போ நமக்கு ஒன்றிய நிதி அமைச்சர் இருக்கிறாங்க. அமைச்சர் நிர்மலா சீதாராமன். உங்களுக்கு தெரியும். அவங்க ஒரு கேள்வி கேட்டோம்னா…  அவங்க அதுக்கு சொல்ற பதில்,  யாராக இருந்தாலும் அசுர வைத்துவிடும். சமீபத்தில் ஒருத்தர் கேள்வி கேட்டாங்க. இந்த மாதிரி…  இந்திய ரூபாய்க்கு நிகரான மதிப்பு… அமெரிக்கன் டாலரும்,  இந்திய ரூபாய்க்கான மதிப்பு ரொம்ப வீழ்ச்சி அடைச்சுட்டேன்னு கேள்வி கேட்டதற்கு,  அவங்க சொன்ன பதில்.

நீங்க ஏன் அப்படி நெகட்டிவா பாக்குறீங்க ? அமெரிக்க டாலரோட மதிப்பு உயருதில்ல..  அந்த மாதிரி நீங்க பாசிட்டிவா பாருங்க என சொன்னாங்க.இப்படிப்பட்ட ஒரு ஒன்றிய அமைச்சர் நமக்கு கிடைச்சிருக்கிறாங்க.  எப்படி மோடி வாயிலையே வடை சுடுவாரோ,  அதே மாதிரி பாஜகவை  சேர்ந்த அத்தனை பேரும் வாயிலே வடை சுடுவாங்க என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |