Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட நீதிபதி…. பந்தாடிய பாஜக…. தொடரும் சர்சை…. பாஜக விளக்கம் …!!

டெல்லி வன்முறை தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி வன்முறை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சில மணி நேரங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் தலைமையிலான அமர்வு பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா தலைவர்கள் காப்பாற்றுவதற்காக நீதித்துறை சுதந்திரத்தை மத்திய அரசு குழி தோண்டி புதைத்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆணைக்கிணங்க கொலிஜியம் பரிந்துரையின் படி முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி இதற்கான பரிந்துரையை கொலிஜியம் செய்தலும் 15 நாட்களாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு டெல்லி போலீஸ்சை நீதிபதிகள் கண்டித்த சில மணி நேரத்தில் இடத்திற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.  இரவோடு இரவாக இடமாற்றம் உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்றும் இடமாறுதலுக்கு வழங்கப்படும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

Categories

Tech |