தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொள்பவர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயிலில் முன்பே பதிவு செய்து வைத்து பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை தேர்வு செய்து வைத்திருக்கின்றார்கள் ஆனால் தற்போது சூழல் வேறாக இருக்கும். அதனால் நீங்கள் புறப்படும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் போரிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும் பயண முகவர்கள் அல்லது பயணிகள் முன்பதிவு அமைப்பு மூலமாக முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி இல்லை.
ஐ ஆர் சி டி இல் போர்டிங் பாயிண்ட்டை மாற்றுவது எப்படி..?
*உங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் உள்நுழையவும்.
*எனது கணக்கு>எனது பரிவர்த்தனை>முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு என்பதற்கு செல்லவும்.
*நீங்கள் மாற்ற விரும்பும் டிக்கெட்டை தேர்ந்தெடுத்து கீழே உள்ள போர்டிங் பாயிண்டை மாற்று ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள ரயில் நிலையங்களின் பட்டியலை ஐ ஆர் சி டி சி காண்பிக்கும் மாற்றத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
*மாற்றத்தை செயல்படுத்த சரி என்பதை கிளிக் செய்யவும்.
*போரிங் பாயிண்ட் மாற்றப்பட்டிருந்தால் வெற்றிகரமாக எச்சரிக்கை வலது புறத்தில் தோன்றும் தொடர்புடைய செய்தி உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் இதற்கு தனியாக நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.