Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்ல கருத்து பெருசா ஜெயிக்கும்”…. சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படத்திற்கு…. வாழ்த்து தெரிவித்த சூர்யா….!!!

“சர்தார்” மற்றும் “பிரின்ஸ்” திரைப்படகுழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகாத தீபாவளியாக அமைந்துவிட்டது. சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படமும் கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் வெளியாக இருக்கின்றன. டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவு இருக்கின்றது. இதே போல நடிகர் கார்த்தியின் படம் எப்பொழுதும் சுவாரஸ்யமான கதையுடன் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கின்றது. இந்நிலையில் இருவரது படங்களும் வெற்றி பெற பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் “பிரின்ஸ்” திரைப்படம் தொடர்பாக அவரது வாழ்த்து செய்தியில் கூறியதாவது, “சிவகார்த்திகேயன், அனுதீப், சத்யராஜ் இசை அமைப்பாளர் தமன் உள்ளிட்ட “பிரின்ஸ்” குழுவினரை மனதார பாராட்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் கார்த்தியின் “சர்கார்” திரைப்படம் தொடர்பாக சூர்யா பதிவிட்டுள்ளதாவது, “நல்ல கதை பெரிய வெற்றியை பெரும் கார்த்தி இயக்குனர் மித்ரன், ஜிவி பிரகாஷ் ஒளிப்பதிவாளர்  ஜார்ஜ் வில்லியம், படத்தொகுப்பாளர் ஆண்டனி எல் ரூபன், உதயநிதி ஸ்டாலினின் ஆகியோரின் “சர்தார்” திரைப்படம் தொடர்பாக நல்ல விஷயங்களை கேள்விபடுகின்றேன். எல்லா இடத்திலும் “சர்தார்” திரைப்படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருவது எனக்கு  மகிழ்ச்சியை அளிக்கின்றது வாழ்த்துக்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |