மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொல்ல சதி செய்ததாக ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
1994-ம் ஆண்டு தான் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி அதில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாகவும், பின்னர்தான், அது தன்னை கொல்ல நடந்த முயற்சி என்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடைபெற்றதாகவும் தீபா கூறியுள்ளார்.