கர்நாடக மாவட்டம் ராம்நகர் மாவட்டத்தில் தொடா அலநாஹள்ளி கிராமத்தில் கொடுக்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசுநாதர் உருவப்படம் இடம்பெற்றது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததொடு மட்டுமல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
மேலும் கிறிஸ்த மதத்தை பரப்ப முயற்சிகள் நடப்பதாக இந்து ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதாவது இந்த படங்கள் அரசு அச்சு விடவில்லை. இவை உள்ளூர் சைபர் கபே ஒன்றில் அச்சிடப்பட்ட அட்டைகள் இது குறித்து புகார் அலுவலகத்திற்கு வந்திருக்கின்றது. எனவே விரைவில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.