Categories
தேசிய செய்திகள்

கேட்கவே பயங்கரமா இருக்கு… மனைவியை 300 துண்டுகளாக வெட்டி… 22 டிபன் பாக்சில் அடைத்த கொடூரம்… கணவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?

ஒடிசாவில் மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஒடிசா மாநிலம்  புவனேஸ்வரில் வசித்து வருபவர் சோம்நாத் பரிதா (வயது 78). இவரது மனைவி உஷா ஸ்ரீ. சோம்நாத் இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் சோம்நாத் மற்றும் அவருடைய மனைவி உஷா ஸ்ரீ  இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ஒருநாள் தகராறின் போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சோம்நாத், கடந்த 201 3-ஆம் ஆண்டு அவரது மனைவியை கொன்று விட்டார்.

Image result for A man has been sentenced to life imprisonment for killing his wife in Odisha.

இதையடுத்து கொடூரமாக மனைவியின் உடலை 300 துண்டுகளாக வெட்டி, பின் 22 டிபன் கேரியரில் போட்டு வீட்டிலேயே வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் துர்நாற்றம் வர கூடாது என்பதற்காக பினாயலை ஊற்றி வைத்துள்ளார். உடலை வெட்டுவதற்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் மற்றும் கத்தியை பயன்படுத்தியுள்ளார். ஆம், கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்களாகியும் யாருக்கும் தெரியாமலேயே இருந்து வந்துள்ளது. இதனிடையே வெளிநாட்டில் இருக்கும் இவர்களது பிள்ளைகள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் முடியவில்லை.

Image result for A man has been sentenced to life imprisonment for killing his wife in Odisha.

அதை தொடர்ந்து உஷாவின் தம்பி ரஞ்சனுக்கு அவர்கள் (பிள்ளைகள்) தொடர்பு கொள்ள முடியாததை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரஞ்சன் வீட்டிற்கு சென்று போய் பார்த்தபோது கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமில்லாமல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் என்னதான் கொலை செய்தாலும் 300 துண்டுகளாக  வெட்டியதை கேட்கவே அதிபயங்கரமாக இருக்கிறது.

Image result for A retired Army doctor has sentenced life imprisonment on Tuesday after he murdered and chopped in his wife in Bhubaneswar in 2013
இதையடுத்து மனைவியை கொலை செய்த முன்னாள் இராணுவ மருத்துவரான கொடூரன் சோம்நாத் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு 6 ஆண்டுகளாக அம்மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், 50,000 அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

Categories

Tech |