Categories
தேசிய செய்திகள்

யார் காரணம் ? பாஜக VS ஆம் ஆத்மி….. தலைநகரில் மாறி மாறி மல்லு கட்டு …!!

டெல்லி கலவரங்களுக்கு யார் காரணம் என்று பாரதிய ஜனதாவும் ஆம் ஆத்மி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து உள்ள ஆம் ஆத்மி கட்சி பாரதிய ஜனதா நிர்வாகிகள் கபில் மிஸ்ராவின் நடவடிக்கைதான் கலவரத்திற்கு காரணம் என்று கூறி பதிலுக்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதாரங்களுடன் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

https://twitter.com/DeepakK70469042/status/1232906109645549568

இதனிடையே பெட்ரோல் குண்டுகள் வீசியதாக பாரதிய ஜனதாவின்  குற்றசாட்டை மறுத்த தாஹிர் ஹாசன் நாங்கள் சகோதரத்துவத்தையும் அமைதியை மட்டுமே விரும்புகின்றோம். எனது வீட்டின் மொட்டை மாடியில் எளிதாக ஏறி விடலாம் என்பதால் சமூகவிரோதிகள் சில ஆயுதங்களை அங்கே வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மொத்தத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய , மாநில அரசுக்கள் எடுக்காமல் வன்முறைக்கு காரணம் யார் என்று மாறி மாறி குற்றசாட்டை முவைத்து வருகின்றனர்.

Categories

Tech |