Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் தியேட்டரில் நடனமாடிய “SK”….. பிரின்ஸ் பட கொண்டாட்டம்….!!!!!!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் தியேட்டரில் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் 600 தியேட்டரில் தமிழிலும், ஆந்திராவில் 300 தியேட்டரிலும் வெளியாகி இருக்கின்றது.

இதையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டருக்கு வந்தார். சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். மேலும் சிவகார்த்திகேயன் பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடியதை பார்த்து அவரும் உற்சாகம் அடைந்து நடனமாடினார். சிவகார்த்திகேயனின் திரைப்படம் முதல் முறையாக தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |