திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தடகள சங்கம் ஆகியோர் இணைந்து 36 வது மாநில இளையோர் தடகளப் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த போட்டி கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்ந போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
அதில் 20 வயது உட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் பயின்று வரும் மாணவர் மகேஸ்வர் வட்டெறிதல் போட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவருக்கு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சான்றிதழிலும் பதக்கத்தையும் வழங்கி சிறப்பித்துள்ளார். இந்த போட்டியில் ஜெயித்த மாணவர் மகேஸ்வர் அடுத்த மாதம் அசாமில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.