மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்க கூடாது? தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் கடைபிடிப்பதில்லை. மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என உறுதியாக கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் டாஸ்மாக் கடை – விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பதிலளித்துள்ள தமிழக அரசு 2004-2006ம் ஆண்டு வரை மதுபான கடைகளின் எண்ணிக்கை 35% குறைத்துள்ளோம். கடைகள் நிறத்திற்கும் நேரத்தையும் குறைத்துள்ளோம். நிர்வாக ரீதியில் கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.