பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை.
ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார். அதற்குப்பின் இருவரின் உறவும் முறிந்து விட்டது. அதனை தொடர்ந்து தான் டயானாவுடன் டேட்டிங் செய்ய தொடங்கிய சார்லஸ் அவரையே காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
சாரா மூலமாக தான் சார்லஸிற்கு டயானா அறிமுகமாகியிருக்கிறார். சாரா தற்போது தன் கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்திருக்கிறது.