திடீரென பட்டாசுகள் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் பான்மோர் என்ற நகர் அமைந்துள்ளது. இங்கு வீடுகளுக்கு அருகே அமைந்துள்ள குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் காயமடைந்த 7 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.