நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அரசியல் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனிடையே நடப்பு ஆண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதாவது பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒருமுறை கட்டைவிரல் பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநில அரசு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இரண்டு முறை கட்டை விரலை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.இரண்டு முறை கட்டைவிரலை ஸ்கேன் செய்தால் மட்டுமே உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்களை பெற முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்த புதிய விதி தற்போது அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.