Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறைப்பு…‌. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மார்க்கை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகத்துறை அமைச்சர் ஜே.சி மது சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஆசிரியர் தேர்வுகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கட் ஆப் மார்க் 50-லிருந்து 45 ஆகவும், 60-லிருந்து 50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் ஆசிரியர் தேர்வு மூலம் 2000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |