Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து ஆங்கில தலைப்பு ஏன்…? ஓ இதுதான் காரணமா…? நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்…!!!!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ் படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயம் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது படங்களுக்கு அடுத்தடுத்த ஒற்றை வார்த்தையில் அதிலும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன் இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை படத்தை பிரமோஷன் செய்வதற்கு இது போன்ற எளிமையான டைட்டில்கள் வசதியாக இருக்கிறது அவ்வளவுதான் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |