Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார்.

அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது, கேள்வியை தவிர்க்காமல் ஏதோ ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய முகமை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தெரிவித்து இருக்கக்கூடிய உத்தரவில்,  பட்டியலின மற்றும் பழங்குடியினர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டி,

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். மேலும் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண்  சான்றிதழ்களை மாணவருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவருக்கு ஏற்பட்ட  சூழ்நிலை கருத்தில் கொண்டு இந்த உத்தரவுகளை பிறப்பிக்கப்படுவதாகவும்,  இந்த உத்தரவை மற்ற வழக்கிற்கு முன்னுதாரணமாக கொண்டு, வழக்கை தொடர்வதற்கு முடியாது எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |