ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் மரணமடைந்தனர்.
தமிழக அரசு சார்பில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. அதற்காக பிரத்யேகமாக இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகள் இதுபோன்று கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அருகே சத்தியம் கிராண்ட் ரிசார்ட்டில் இன்று காலை 50,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.. அப்போது விஷவாயு தாக்கி தொட்டி உள்ளேயே மயங்கி விழுந்து 3 பேரும் பலியாகினர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தொடர்ந்து சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்..
மேலும் அஜாக்கரதையாக செயல்படுவது, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் பணியில் ஈடுபடுத்தியது போன்ற பிரிவுகளில் விடுதி நிர்வாகம் மற்றும் விடுதி மேலாளர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.