சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன் மூர்த்தி(30) என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சாப்பாடு இல்லை எனக் கூறியதால் தனது தாயை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம்(57), தங்கை செல்வி(40) ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு சென்றுள்ளனர்.
இதனை அறிந்த மூர்த்தி செல்போன் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு எனக்கு எதிராக சாட்சி சொல்ல செல்கிறீர்களா? என கேட்டு தந்தை மற்றும் தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்படி கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.