நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சொன்னதை செய்வார் மோடி!
இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2)
— K.Annamalai (@annamalai_k) October 20, 2022
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த ஆண்டு ஜூன் மாதம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொது துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்க 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.