Categories
உலக செய்திகள்

மின்சாரம் இல்லாமல் குளிரில் வாடினாலும்… “ரஷ்யாவை அதிகமாக வெறுப்போம்”…? உக்ரைன் மக்கள் பேச்சு…!!!!!

மின்சாரம் தண்ணீர் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரஷ்யாவை நாங்கள் அதிகமாக வெறுப்போம் என உக்ரைன் மக்கள் கூறியுள்ளனர்.

உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்று உள்ளார். அப்போது அவர் பேசும்போது எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்றிய அரசியல் தலைமை கட்டளையிட்டு இருப்பதாக தெரிகின்றது. இதன் விளைவுகள் ஐரோப்பாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது உக்ரைனில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மின்சாரம் மற்றும் குளிர்காலத்தை சமாளிப்பதும் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குவதே ரஷ்யா நோக்கமாக கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

மேலும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகமானதால் ஏராளமான ஊழியர்கள் ஐரோப்பா நோக்கி செல்கின்றார்கள் என அவர் பேசியுள்ளார். இதனை அடுத்து ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவது மற்றும் சிறிய அளவிலான மின்சார சேமிப்பு கூட மின்விநியோக செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என கீவ் நகர மேஜர் விட்டலி கிளிட்ச்கோ வலியுறுத்தியுள்ளார். மேலும் மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கும் உக்ரேனியர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இது நம் அணுகுமுறையை மாற்றப் போவதில்லை நாம் அவர்களை அதிகமாக விருப்பம் ரஷ்யாவில் இருப்பதைவிட தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் உட்கார விரும்புகிறேன் என உக்ரைனில் வாழும் பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்சாரம் பொருட்கள் கடை வைத்திருக்கும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளர் ஒருவர் பேசும்போது ஜெனரேட்டர்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் முன்டியடித்துக்கொண்டு வருகின்றார்கள். இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம் ஆனால் அதை எங்களால் சமாளிக்க முடியும் நம்மால் வாழ முடியாதது என்று எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |