தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள்தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண். தெலுங்கு சினிமாவில் சென்ற சில ஆண்டுகளாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில், அண்மையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதேபோல் ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பதை தன் கனவாகவே வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த்.
இது தொடர்ப்க சமீபத்திய பேட்டியில் அல்லு அரவிந்த் கூறியதாவது, ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரையும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க வைக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை ஆகும். இவர்கள் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு “சரண் அர்ஜுன்” என டைட்டிலை கூட ஏற்கனவே நான் முடிவுசெய்து, அதனை முறைப்படி பதிந்து வைத்து வருடந்தோறும் புதுப்பித்தும் வருகிறேன். ஆகவே இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மாஸாக இருக்கும். கண்டிப்பாக வருகிற நாட்களில் இப்படம் உருவாகியே தீரும்” என தன் ஆசையை தெரிவித்துள்ளார்.