நாடு முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.அதேசமயம் ரயில் டிக்கெட் ஐ ஆர் சி டி சி என்ற செயலை மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தவாறு முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஐ ஆர் சி டி சி மூலம் ஒருவர் தனது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் இரண்டு மடங்கு கூடுதலான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
அதன்படி ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.இதனிடையே நீங்கள் உடனடியாக பயணம் மேற்கொள்ள தட்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அதில் ஏசி வகுப்பிற்கான முன்பதிவு காலை 10 மணிக்கு ஸ்லீப்பர் வசதிக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகின்றது.
இதற்கு முதலில் IRCTCஇணையதள பக்கத்திற்கு சென்று அதில் ப்ரோபைல் பகுதிகளுக்குச் சென்று பயணிகளின் விவரங்கள் கொண்ட மாஸ்டர் லிஸ்ட் ஒன்றை உருவாக்க வேண்டும்.இப்போது தட்கலில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால் தனி பயண பட்டியலை உருவாக்கி ஸ்டேஷன் கோட்கள்,ரயில் சென்றடையும் நிலையங்கள் என அனைத்தையும் சரிபார்த்த பின்னர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.உங்களுக்கு உடனடியாக தட்கல் டிக்கெட் கிடைக்க வேண்டுமென்றால் பெர்த் ஆப்ஷன்கள் எதையும் கொடுக்காமல் நீங்கள் முன் பதிவு செய்ய வேண்டும்.