இந்திய சந்தையில் OPPO நிறுவனம் புதிய A17K ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 6.56 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.56 இன்ச் 1612×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், IMG பவர் VR GE8320 GPU ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய OPPO A17K ஸ்மார்ட்போன் Navy blue மற்றும் gold என இரண்டு விதமான கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10, 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OPPO A17K விற்பனை ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.