நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்பொழுது அதில் ரசிகர் ஒருவர் வருங்காலத்தில் இந்தி, மலையாளம் இயக்குனர்களை தேர்வு செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது, “கண்டிப்பாக எல்ல மொழி இயக்குனர்களுடனும் பணிபுரிவேன் என்று நினைக்கிறேன். சிலரை சந்தித்துஅவர்களிடம் உரையாடி வருகிறோம். எல்லோரும் பல ஐடியாவுடன் வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.