இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது.
ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதன் பிறகு அவர் இலங்கையின் அதிபர் ஆகிவிட்டார். எனவே, அரசியல் சாசன விலக்கு பெற்றிருந்ததால் அந்த சம்மன் விலக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.
இதற்காக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன்படி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.