பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் ஹேமந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதா தனது பாட்டி அஞ்சலியை பார்ப்பதற்காக பெருவம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிந்தனை செல்வன், மோகன் குமார், கல்யாணி, பழனியம்மாள், சக்திவேல் ஆகியோர் அஞ்சலியை கீழே தள்ளிவிட்டனர்.
இதனை பார்த்த அனிதா எனது பாட்டியை ஏன் தள்ளுகிறீர்கள் என தட்டிக் கேட்டார். அப்போது ஐந்து பேரும் இணைந்து அனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சக்திவேல் மோகன் குமார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.