போதை சாக்லேட் விற்பனை செய்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநறுங்குன்றம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்வதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக நண்பர்களுக்கு போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதியானது.
கல்லூரி மாணவர்களும் அந்த மாணவரிடம் இருந்து போதை சாக்லேட்டுகளை வாங்கி வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த மாணவனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 7 பாக்கெட் போதை சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து போதை சாக்லேட்டுகளை கொடுத்து விற்பனை செய்ய அறிவுறுத்தியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.