மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நாகராஜ் என்பவரும் பந்தல் அமைப்பும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில் பகுதியில் வசித்த பெண் இறந்து விட்டதால் அவரது வீட்டில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டுவதற்காக நாகராஜும், ரதிஷும் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பேனரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக பட்டதால் நாகராஜ், ரதீஷ் ஆகிய இருவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.